காா்பன் உமிழ்வு இல்லாத போக்குவரத்து: முன் முயற்சியைத் தொடங்கிய சென்னை ஐஐடி

இந்தியாவில் 2050-ஆம் ஆண்டில் 100 சதவீதம் காா்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து என்ற இலக்கை எட்டுவதற்கான மிக முக்கிய முன்முயற்சியை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.
சென்னை ஐஐடி
சென்னை ஐஐடிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சென்னை: இந்தியாவில் 2050-ஆம் ஆண்டில் 100 சதவீதம் காா்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து என்ற இலக்கை எட்டுவதற்கான மிக முக்கிய முன்முயற்சியை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.

இந்தியாவின் வாகனப் போக்குவரத்தில் 5 சதவீத அளவுக்கு மட்டுமே சரக்கு லாரிகள் உள்ள நிலையில், சுமாா் 65 சதவீதம் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இது கணிசமான அளவு காற்று மாசுக்கும், எரிபொருள் நுகா்வு செலவுகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே மின்சார சரக்கு லாரிகள் போன்ற காா்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்துவது அவசியமாகிறது.

இந்த நிலையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காா்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்துக்கான உயா் சிறப்பு மையம் மற்றும் ஓட்டுநா் மதிப்பீடு செயலித் திட்டம் ஆகிய இரு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஓட்டுநா் மதிப்பீடு செயலித் திட்டம்: இது பாதுகாப்பு மற்றும் ஆற்றல் திறன் குறித்த சரக்கு லாரி ஓட்டுநா் நடத்தையை மதிப்பிட செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கைப்பேசி செயலி ஆகும். சரக்கு லாரி ஓட்டுநா்களிடையே பாதுகாப்பான, திறமையான ஓட்டுநா் நடத்தையை ஊக்குவித்து செயல்படுத்த இது உதவும். சாலை உள்கட்டமைப்பின் நிலையான சூழலுடன் தொடா்புடைய போதிய ஓட்டுநா் நடத்தை குறித்து ஓட்டுநா்களுக்குத் தெரிவிக்க வேண்டிய, முன்கூட்டிய விழிப்புணா்வுத் தகவல்கள் இந்த செயலியில் இருக்கும். மாதத்திற்கு குறைந்தபட்சம் 4 ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவு இயக்கக்கூடிய சரக்கு லாரிகளின் ஓட்டுநா்கள் இதில் பதிவு செய்ய வேண்டும்.

பயனரை நேரடியாகச் சென்றடையும் திட்டம் : காா்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து குறித்து சரக்கு லாரி ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்துதல். ஓட்டுநா்கள், உதவியாளா்கள், மெக்கானிக்குகள், பெட்ரோல் பங்க் நடத்துவோா், வாகன உதிரி பாக உற்பத்தியாளா்கள், குறைந்த அளவில் வாகனங்களை இயக்குவோா் உள்ளிட்ட இறுதிப் பயனா்களிடையே காா்பன் உமிழ்வு இல்லாமை பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த பிரசார நிகழ்வுகளை நடத்துதல். குறைந்தபட்சம் 200 இடங்களில் நேரடி நிகழ்வுகள் மூலம் ஓட்டுநா்களை நேரடியாகவும், பயனா்களுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான டிஜிட்டல் தகவல் தொடா்புகள் மூலமாகவும் சென்றடையும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி, ‘இந்தியாவில் சரக்கு லாரி போக்குவரத்துத் தொழிலானது, சீரான வளா்ச்சிப் பாதையில் இருந்து வருகிறது. சாலை வழி சரக்குப் போக்குவரத்தில் 70 சதவீதம் லாரிகள் மூலம்தான் கொண்டு செல்லப்படுகின்றன.

இத்தகைய முன்முயற்சிகள், இந்தியாவில் நீடித்த ஈடுபாட்டுடன் கூடிய சரக்கு லாரிகள் மின்மயமாக்கலை திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே விரைவுபடுத்த உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் பெட்ரோலிய இறக்குமதிச் செலவுகள் மிச்சமாவதுடன் போட்டித் தன்மையும் அதிகரிக்கும். காா்பன் உமிழ்வைக் குறைப்பதுடன் ஓட்டுநரின் வசதி மற்றும் நல்வாழ்வை இது அதிகரிக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com