
நெல்லையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து, தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.
இந்த நிலையில், நேற்று நெல்லை, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து இன்றும் நெல்லையில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி படுகையிலும் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனால் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழ்நாடு நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.