
கோவை மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 27 ஆம் தேதி மாசாணியம்மன் கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது படபிடிப்பானது கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது.
இதில் சூர்யா கதாநாயகனாகவும், திரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் கோவை மருதமலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடிகை திரிஷா சனிக்கிழமை வருகை தந்தார். அவர் வருகையை அறிந்த ரசிகர்கள் திரிஷாவை புகைப்படம் எடுத்தனர்.
தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அவர் அங்கிருந்து புறப்பட்டு காரில் சென்றார். சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா 'ஆறு' திரைப்படத்தில் ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா படம் தவிர அஜித்தின் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' மற்றும் கமலின் 'தக் லைப்' ஆகிய படங்கள் திரிஷா கையில் உள்ளது. இதனிடையே திரிஷா திரைத்துறைக்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனை அவரே தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.