ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு

அன்னாரது உடல் ராமாவரம் மின் மயானத்தில் இன்று(டிச. 15) மாலை தகனம் செய்யப்படுகிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு
ANI
Published on
Updated on
1 min read

சென்னை: மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் மருத்துவமனையிலிருந்து மணப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று(டிச. 15) மாலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. அதனைத்தொடர்ந்து அன்னாரது உடல் ராமாவரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

இணைப்பு
PDF
DIPR-P.R No.2235-TN Govt Press Release-EVKS Elangovan Condolence -Date 15.12.2024
பார்க்க

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலில் சிறப்பாக மக்கள் பணியாற்றியவர் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று என தமிழக அரசு தரப்பில் பாராட்டியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com