ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம்
முகலிவாக்கம் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது.


முகலிவாக்கம் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் சனிக்கிழமை காலமானார். பின்னர் அவரது உடல் மருத்துவமனையில் இருந்து மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ். பாரதி, துணை பொதுச்செயலர் கனிமொழி, பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், பாமகவின் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு ஞாயிற்றுகிழமை முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மூன்று முறை வானை நோக்கி துப்பாக்கியால் 48 குண்டுகள் முழங்க சுட்டு அரசு மரியாதை செய்தனர். பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முகலிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் தொண்டர்களும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...