கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

‘சென்னை சங்கமம்’- 4 நாள்கள் திருவிழா: அமைச்சா் சாமிநாதன் தகவல்

சென்னை சங்கமம் திருவிழா, 4 நாள்கள் நடைபெறவிருப்பதாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளாா்.

News image
அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
Updated On :16 டிசம்பர் 2024, 10:16 pm

Din

சென்னை: சென்னை சங்கமம் திருவிழா, 4 நாள்கள் நடைபெறவிருப்பதாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளாா்.

இது குறித்து தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆண்டு ஜன. 13-ஆம் தேதி தொடங்கிவைப்பாா். அதன்பிறகு, ஜன. 14 முதல் 17-ஆம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

சென்னையையொட்டியுள்ள மாவட்டங்கள் மட்டுமல்லாது, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.