அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.


தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆந்திரம்-வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்துள்ளது.
இது மேலும் வலுகுறைந்து அரபிக் கடல் நோக்கிச் சென்றுவிடும். எனினும் காற்றில் ஈரப்பதம் இருப்பதால், இதன் தொடர்ச்சியாக வரும் 30 - ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...