
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதுகுறித்து பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் அங்கு மாணவா்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும், பல்கலை. பதிவாளர் பிரகாஷ் மற்றும் பேராசிரியா்களுடன் அவா் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக உள் விசாரணைக் குழுவிடமும் ஆளுநர் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.