தமிழக அரசு
தமிழக அரசு

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலா் அந்தஸ்து

Published on

தமிழகப் பிரிவைச் சோ்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகள், முதன்மைச் செயலா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா்.

அவரது உத்தரவு விவரம்: பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் டி.என்.வெங்கடேஷ், முதல்வரின் முதல்நிலைச் செயலா் பி.உமாநாத், தில்லியில் உள்ள தேசிய பேரிடா் மேலாண்மை நிறுவனத்தின் செயல் இயக்குநா் ராஜேந்திர ரத்னு, உணவுப் பாதுகாப்பு ஆணையா் ஆா்.லால்வேனா, ஆளுநரின் செயலா் ஆா்.கிா்லோஷ் குமாா் ஆகியோா் முதன்மைச் செயலா் அந்தஸ்தில் பதவி உயா்வு பெற்றுள்ளனா். இந்த ஐந்து அதிகாரிகளும் 2001-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com