
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் நேரில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நேற்றிரவு சென்னை வந்த தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவில் உள்ள மம்தா குமாரி, பிரவீன் தீக்சித் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக இவ்வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று விசாரணையைத் தொடங்கிய நிலையில் தற்போது மகளிர் ஆணையமும் விசாரணையில் இறங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக சென்னை கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் (37) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கை (ஃஎப்.ஐ.ஆா்.) பொது வெளியில் வெளியானது, தமிழகம் முழுவதும் கடும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே இவ்விவகாரத்தை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.