எடை போட்டு பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கை: பட்ஜெட்டினை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டினை தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 
எடை போட்டு பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கை: பட்ஜெட்டினை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். 

இந்த நிலையில், 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் ஆறாவது நிதி அறிக்கையாகும். இந்தப் 

இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் பட்ஜெட் இது என பிரதமர் பாராட்டியிருக்கும் வேளையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டினை தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் இல்லாநிலை பட்ஜெட் என்று முதலமைச்சர் விமர்ச்சித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: 

கடந்த காலச் சாதனைகளை இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை. நிகழ்கால பிர்சனைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அமையவில்லை. எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை. மொத்ததில் ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறார் நிதியமைச்சர். ஆட்சி முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த நிதி நிலையில் தெரிகிறது. 

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு அறிவிப்பை எதிர்பார்த்த மக்களுக்கு இது ஏமாற்றம். சாதாரண, நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. 

அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையைச் சரிசம விகிதத்தில் பறிப்பதுதான் பாஜக பயன்படுத்தும் சமூகநீதி. சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜ.க அடைந்திருப்பதைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது. 

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை வழங்காமல்  தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார்கள். இல்லை, இல்லை என சொல்வதற்கு எதற்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்? 

எடை போட்டு பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத்தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் எனக் கூறினார். 

2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com