ஆன்லைனில் எஸ்இடிசி டிக்கெட்: நீங்களும் வெல்லலாம் ரூ.10 ஆயிரம்

எஸ்இடிசி பேருந்து டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் முயற்சியாக, தமிழக போக்குவரத்துத் துறை புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
ஆன்லைனில் எஸ்இடிசி டிக்கெட்: நீங்களும் வெல்லலாம் ரூ.10 ஆயிரம்


சென்னை: எஸ்இடிசி பேருந்து டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் முயற்சியாக, தமிழக போக்குவரத்துத் துறை புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, ஆன்லைன் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்இடிசி) பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்கள் தவிர, வார நாள்களில் (திங்கள் முதல் வியாழன் வரை) ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, ஒவ்வொரு மாதமும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் பேருந்து போக்குவரத்துக்கான டிக்கெட் முன்பதிவு தரவுத்தளத்திலிருந்து பயணிகளின் விவரங்கள் தேர்ந்தெடுக்கப்படும், மேலும் இந்தத் திட்டம் போக்குவரத்துத் துறையின் தொழில்நுட்பப் பிரிவான பல்லவன் போக்குவரத்து ஆலோசனை சேவைகளால் செயல்படுத்தப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி மாதத்திற்கான ஆன்லைன் லாட்டரி முறை மூலம் ரொக்கப் பரிசுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி முருகன், வேலூரைச் சேர்ந்த சீதா கே, சிதம்பரத்தைச் சேர்ந்த இமேத்யாஸ் ஆரிஃப் என்ற அறிவித்தார்.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளை மேற்கொள்ளப் பயன்படும் எஸ்இடிசி தளத்தின் தரவுகளின்படி, இந்த முயற்சி ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சாதாரண வார  நாள்களில், மொத்தமுள்ள 80,000 பேருந்து டிக்கெட்டுகளில் ஆன்லைன் முன்பதிவுகள் மூலம் ஒரு நாளைக்கு 7,000 முதல் 8,000 டிக்கெட்டுகள் வரை மட்டுமே எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“இவர்களுடன் கூடுதலாக 45 முதல் 50 சதவீத முன்பதிவு செய்யாத பயணிகளுடன், திங்கள் முதல் வியாழன் வரை பேருந்து பயணிகளின் விகிதம் 65% ஆக உள்ளது. இதை 85 முதல் 90 சதவீதமாக உயர்த்த விரும்புகிறோம்,” என்கிறார்கள்.

"தேவையை முன்கூட்டியே கணிப்பதன் மூலம், பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணியாளர்கள் மற்றும் பேருந்துகளை திறம்பட பயன்படுத்த முடியும். தற்போது, ​​நாங்கள் பெரும்பாலும் பேருந்து முனையங்களில் எடுக்கப்படும் டிக்கெட் தேவையைப் பொறுத்து கூடுதல் சேவைகளில் ஈடுபடுகிறோம்,” என்றும் போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com