பிஆர்எஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவு: தடிகொண்ட ராஜய்யா கட்சியில் இருந்து விலகல்!

முன்னாள் துணை முதல்வரும், எம்எல்ஏவுமான தட்டிகொண்ட ராஜய்யா கட்சியில் இருந்து திடீரென விலகுவதாக சனிக்கிழமை அறிவித்திருப்பது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஆர்எஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவு: தடிகொண்ட ராஜய்யா கட்சியில் இருந்து விலகல்!


ஹைதராபாத் (தெலங்கானா): மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி (பிஆர்எஸ்) பெரும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், முன்னாள் துணை முதல்வரும், எம்எல்ஏவுமான தட்டிகொண்ட ராஜய்யா கட்சியில் இருந்து திடீரென விலகுவதாக சனிக்கிழமை அறிவித்திருப்பது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாரங்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கான்பூர் பேரவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று துணை முதல்வராக பதிவி வகித்த ராஜய்யா திடீரென் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

பிஆர்எஸ் தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து விலகுவது, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வரும் கட்சிக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கடந்த 2023 பேரவைத் தேர்தலின் போது, ராஜய்யாவிற்கு பதிலாக அந்த தொகுதி மற்றொரு துணைமுதல்வரான கடையம் ஸ்ரீஹரியை பிஆர்எஸ் நிறுத்தியது.இதனால் அதிருப்தியில் இருந்து வந்ததே அவர் கட்சியில் இருந்து விலகுவதற்கு காரணமாக இருக்கலாம் என கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.

இதற்கிடையில், பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள தட்டிகொண்ட ராஜய்யா, விரைவில் காங்கிரஸ் அல்லது பாஜகவில் இணைய இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தெலங்கானா பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜி கிஷன் ரெட்டி, வரும் மக்களைவத் தேர்தலில் தனது பாஜகவுக்கு மாநிலத்தில் இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, பாஜகவின் தெலங்கானா பிரிவு பிப்ரவரி 2-ஆம் தேதி மாநில அளவிலான கூட்டத்தை நடத்தும் என்று தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com