சிறார்கள் வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்ட வாகன உரிமம் ரத்து!

18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனங்களை இயக்கினால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   
சிறார்கள் வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்ட வாகன உரிமம் ரத்து!

சென்னை : 18 வயது பூர்த்தியடையாதவர்கள் கார் அல்லது இருசக்கர வாகனங்களை இயக்கினால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு கடும் அபராதம் விதிக்கப்படுவதோடு, அவருடைய வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்(ஆர்சி) ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

முன்னதாக, மோட்டார் வாகனச் சட்டப்படி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கவும், அதன்பின், அந்த இழப்பீட்டுத் தொகையை வாகன உரிமையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மத்திய மோட்டார் வாகனங்கள் சட்டம் 2019-இன் படி, விபத்துக்கு காரணமான வாகனத்தை, சிறாரோ அல்லது உரிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாதவரோ  ஓட்டினால் மட்டுமே,  விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்(காயமடைந்தோர் அல்லது உயிரிழந்தோர்) சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இழப்பீடு கோர முடியும் என்று தெரிவிக்கிறது.

திருத்தப்பட்ட இந்த புதிய விதிமுறைகள் 2022-ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு பின், அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தும்.

இதனிடையே, காரைக்குடியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஓட்டுநர் உரிமமில்லாத சிறுவன் ஒருவன் இயக்கியதால், சாலை விபத்து நடந்தது தொடர்பான  வழக்கின் விசாரணையில், விபத்துக்கு காரணமான இருசக்கர வாகனத்தின் உரிமத்தை 12 மாதங்களுக்கு ரத்து செய்யவும்,  வாகன உரிமையாளருக்கு அபராதமாக ரூ.26,000 செலுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு(ஆர்டிஓவுக்கு) நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com