பாஜகவில் இணையும் அதிமுகவின் 14 முன்னாள் எம்எல்ஏக்கள்?
தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர் இன்று அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர் இன்று அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தங்கராசுவும் பாஜகவில் இன்று இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. தமிழகத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது.
இந்த நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தங்களின் கூட்டணிக்கு இழுப்பதற்கான பேச்சுவார்த்தையை அதிமுகவும், பாஜகவும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் உள்பட 14 முன்னாள் எம்எல்ஏக்களும், காங்கிரஸின் முன்னாள் எம்எல்ஏ தங்கராசும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழக மேலிடப் பொறுப்பாளர்கள், தமிழக தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இன்று இணையவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...