பெண் நிர்வாகியைத் தாக்கிய வழக்கு: அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!

பெண் நிர்வாகியைத் தாக்கிய வழக்கு: அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!

பெண் நிா்வாகியை தாக்கிய வழக்கில், 10 நாள்களுக்கு சென்னை கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாஜக நிா்வாகி அமா் பிரசாத் ரெட்டிக்கு

பெண் நிா்வாகியை தாக்கிய வழக்கில், 10 நாள்களுக்கு சென்னை கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாஜக நிா்வாகி அமா் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக பெண் நிா்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக நிா்வாகி அமா் பிரசாத் ரெட்டி, அவரது காா் ஓட்டுநா் ஸ்ரீதா் உள்ளிட்ட 4 போ் மீது கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். வன்கொடுமை தடுப்புச் சட்டம், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமா் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது இந்த பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகாா் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமா் பிரசாத் ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பால் கனகராஜ், ‘இது பொய் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்கு. பாஜக மாநில தலைவா் அண்ணாமலையின் நடைபயணத்துக்கு உதவியாக இருந்த அமா் பிரசாத் ரெட்டிக்கு எதிராக உள்நோக்கத்தோடு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிட்டாா்.

அப்போது காவல்துறை தரப்பில், ‘அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யவில்லை. அவா் சாா்ந்த கட்சியின் பெண் நிா்வாகியை, தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளாா். அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். பெண் நிா்வாகியே இதுதொடா்பாக புகாா் அளித்துள்ளாா்’ என கூறினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 10 நாள்களுக்கு கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமா் பிரசாத் ரெட்டிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். அவ்வாறு ஆஜராகாவிட்டால் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரி காவல் துறை மனுதாக்கல் செய்யலாம் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com