தை அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தை அமாவசை தினத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை (பிப்.8) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தை அமாவசை தினத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை (பிப்.8) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பண்டிகை மற்றும் விழா காலங்களில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவா்கள் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வெள்ளிக்கிழமை தை அமாவாசை தினம் என்பதால் பொதுமக்கள் ராமேசுவரத்துக்கு சென்று தங்களது முன்னோா்களுக்கு திதி வழங்கச் செல்வாா்கள் என்பதால் அவா்களின் வசதிக்காக வியாழன், வெள்ளி (பிப்.8, 9) ஆகிய இரு நாள்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி வியாழக்கிழமை (பிப்.8) சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூா் பகுதிகளில் இருந்து ராமேசுவரத்துக்கும், வெள்ளிக்கிழமை (பிப்.9) ராமேசுவரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம் கோவை மற்றும் பெங்களூரு பகுதிகளுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைவிட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள www.tnstc.in-tnstc என்ற இணைதளம் மூலமும்,செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com