பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நடராஜர் கோயிலில் அதிருத்ர பாராயணம் தொடக்கம்!

நடராஜர் கோயிலில் அதிருத்ர பாராயணம் வியாழக்கிழமை (பிப்.8) தொடங்கியது.

News image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை தொடங்கிய அதிருத்ர ஜப பாராயணத்தில் ஈடுபட்ட பொது தீட்சிதர்கள் .

Updated On :8 பிப்ரவரி 2024, 5:49 am

DIN

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் உலக நன்மை கருதி ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு கோடி அர்ச்சனை முடிவுற்று, பிப்.22-இல் அதிருத்ர மஹா யாகம், லட்ச ஹோமம், மஹாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நடராஜர் கோயிலில் அதிருத்ர பாராயணம் வியாழக்கிழமை (பிப்.8) தொடங்கியது.

கோடி அர்ச்சனை ஆரம்பம் : நடராஜர் கோயிலில் உலக நன்மை கருதி பொதுதீட்சிதர்களால் கோடி அர்ச்சனை கடந்த மாதம் டிச.29-ஆம் தேதி. ஒரு நாளின், காலை வேளையில் ஒரு முறை லட்சார்சனையும், மாலை வேளையில் ஒரு முறை லட்சார்ச்சனையும் செய்தால், நாள் ஒன்றுக்கு  இரண்டு லட்சார்சனைகள் அமையும். இதனையே, தொடர்ந்து 50 நாள்களுக்கு கோடி அர்ச்சனை நடைபெற்றது.

அதிருத்ர ஜபம்: வியாழக்கிழமை(பிப்.8) காலை அதிருத்ர ஜபம் தொடங்கியது. அதிருத்ர ஜபம் பிப்.18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை  தினமும் காலை 8 மணியளவில், 121 தீட்சிதர்களால் பத்து நாள்களில் 14,641 முறை ஸ்ரீ ருத்ர ஜப பாராயணம் (அதிருத்ர ஜபம்) செய்யப்படுகிறது.

அதிருத்ர மஹா யாகம் :  யஜுர் வேதத்தின் மையப் பகுதியானதும், நமசிவாய எனும் ஐந்தெழுந்து மந்திரத்தை தன்னுள் கொண்டதும், முழுவதும் சிவபெருமானையே போற்றுவதும் ஆகிய ஸ்ரீ ருத்ர மந்திரம் அளப்பரிய சக்தி கொண்டது. பரமேஸ்வரரின் பேரருளைப் பெற்றுத் தரக்கூடியது. மங்களங்களை வழங்கக் கூடியது. அதிருத்ர மஹா யாகம் என்பது   ஸ்ரீ ருத்ரத்தினை 14641 முறை சொல்லப்பட்டு, அதில் பத்தில் ஒரு பங்கு ஹோமம் செய்யப்படுவது ஆகும்.

மகாபிஷேகம்:  உலக நன்மை கருதி பிப்.22-ஆம் தேதி வியாழக்கிழமை அதிருத்ர மஹாயாகம், லட்ச ஹோமும், கோயில் கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மஹாபிஷேகமும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் சிதம்பரம்  நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களால் நடத்தப்படவுள்ளது.

லட்ச ஹோமம் என்பது ஒரே நேரத்தில் நூற்று எட்டு  தீட்சிதர்கள், ஒன்பது யாக குண்டங்கள் வாயிலாக நடேச ஸஹஸ்ரநாமாவளிகளை ஹோமம் செய்வது லட்ச ஹோமம் ஆகும்.

இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர், துணை செயலாளர் க.சி.சிவசங்கர தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.