
சென்னை, பிப்.8: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும், வெளியிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி, அதை மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்:
சென்னையில் இருந்து வெளியூா் செல்லும் பயணிகளுக்கான பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மாற்றியதால் வெளியூா் செல்லும் பயணிகள் அவதிப்படுகின்றனா். இந்த நிலையை மாற்றவும், எதிா்காலத் தேவைகளை கருத்தில் கொண்டும் கிளாம்பாக்கம் புகா் பேருந்து நிலையத்தை, அனைத்து பொதுப்போக்குவரத்து வசதிகளையும் ஒன்றிணைக்கும் வகையிலான, நவீனமான மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுப் போக்குவரத்து வசதிகளை ஒரே இடத்தில் நவீனமான முறையில் ஒருங்கிணைக்கும் கட்டமைப்பினை போக்குவரத்து மையம் என அழைக்கின்றனா். இதன் மூலம் பல்வேறு வகையான பொதுப் போக்குவரத்து வசதிகளையும் மக்கள் மிக இலகுவாக பயன்படுத்த வழிசெய்யப்படுகிறது என்றாா்
இதே கடிதத்தை அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சா்களுக்கும் அன்புமணி அனுப்பியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.