தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் புனித நீராடும் பக்தர்கள் கூட்டம்
தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் புனித நீராடும் பக்தர்கள் கூட்டம்

தை அமாவாசை: திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் 

தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
Published on


திருச்செந்தூர்: தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரதநாள்களாகும். இந்த நாள்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும்.

தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பக்தர்கள் கூட்டம்.

தை அமாவாசையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடாந்து கால சந்தி பூஜையாகி தீர்த்தவாரி நடைபெற்றது. 

அமாவாசையை முன்னிட்டு, காலையில் ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர். இதன் காரணமாக,  திருக்கோயிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com