39 தொகுதியிலும் போட்டியிட பாஜக விரும்புகிறது: கே.பி.ராமலிங்கம்

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதியிலும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக தொண்டர்கள் விரும்புவதாக அந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.
பாஜக தமிழக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம்
பாஜக தமிழக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம்
Published on
Updated on
1 min read

நாமக்கல்: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதியிலும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக தொண்டர்கள் விரும்புவதாக அந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.

நாமக்கல்லில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி மோசமாக உள்ளது. இவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு பயப்படுவார்கள் என தெரியவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினரின் அராஜகத்தை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. வரும் தேர்தலில் தமிழகத்தில்  மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை காண முடியும்.

தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதே பாஜக தொண்டர்களின் எண்ணம். மத்திய பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பவர்களுக்கு எங்களது கூட்டணியில் இடமில்லை என்பது பாஜக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.

2024-ஆம் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவர்கள் எங்களிடம் லேகியம் வாங்கி சாப்பிடுகிறார்கள்.

ஜனநாயகத்திற்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள். சோழர்கள் அதை செய்தார்கள் என்பதற்கு உத்தரமேரூர் கல்வெட்டு சான்று.

மக்களவைத் தேர்தலில் இருப்பது 2 அணி தான், அது பாரத பிரதமராக மோடி வேண்டுமா?, வேண்டாமா?. மீண்டும் பிரதமராக மோடி ஆட்சிப் பொறுப்பில் அமருவது உறுதி என கே.பி.ராமலிங்கம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com