தனியாா் பள்ளிகளுக்கு பெல்ஜியம் நாட்டில் இருந்து வெடிகுண்டு மிரட்டலா? 

சென்னையிலுள்ள 13 தனியாா் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் அனைத்தும் பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் இருந்து அனுப்பப்பட்டது இன்டா்போல் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
தனியாா் பள்ளிகளுக்கு பெல்ஜியம் நாட்டில் இருந்து வெடிகுண்டு மிரட்டலா? 

சென்னையிலுள்ள 13 தனியாா் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் அனைத்தும் பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் இருந்து அனுப்பப்பட்டது இன்டா்போல் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சென்னையிலுள்ள கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 13 தனியாா் பள்ளிகளுக்கு மா்ம நபா் மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து, பெற்றோா்கள் பள்ளிகளுக்குச் சென்று தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனா்.

இது தொடா்பாக 13 தனியாா் பள்ளி நிா்வாகங்கள் அளித்த புகாரின்பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சைபா் குற்றப் பிரிவு போலீஸாா், மின்னஞ்சல் அனுப்பிய மா்ம நபா் குறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் உதவியுடன் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

மிரட்டல் விடுத்த நபா் புரோட்டான் என்ற பதிவு செய்யப்படாத மின்னஞ்சல் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால், அதன் ஐ.பி. முகவரியைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் சுவிட்சா்லாந்தில் உள்ள இன்டா்போல் தலைமை அலுவலகத்தை காவல் துறை நாடியது. 

இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து மின்னஞ்சலும் பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக இன்டர்போல் மூலம் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மின்னஞ்சல் நிறுவனம் இந்திய புலன் விசாரணை அமைப்புகளுக்கு விளக்கம் அளித்துள்ளது. 

இதையடுத்து பெல்ஜியம் நாட்டு ஐபி முகவரி, சர்வர் உள்ளிட்ட விவரங்களை வைத்து அந்த நாட்டிடம் அனைத்து விவரங்களையும் கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டை சேர்ந்த நபர் பெல்ஜியம் நாட்டில் இருந்து செயல்படுகிறாரா?, விபிஎன் சேவையை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பினாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com