கூவத்தில் கொட்டப்படுகிறதா ரயில்வே கட்டடக் கழிவுகள்?

கூவம் ஆற்றங்கரையோரம் நடைபெறும் ரயில்வே பணிகளின்போது, கட்டடக் கழிவுகள் அனைத்தும், எந்தத் தங்கு தடையும் இன்றி கூவம் ஆற்றில் கொட்டப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூவத்தில் கொட்டப்படுகிறதா ரயில்வே கட்டடக் கழிவுகள்?


கூவம் ஆற்றங்கரையோரம் நடைபெறும் ரயில்வே பணிகளின்போது, கட்டடக் கழிவுகள் அனைத்தும், எந்தத் தங்கு தடையும் இன்றி கூவம் ஆற்றில் கொட்டப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது சென்னை பூங்கா நகர் புறநகர் ரயில் நிலையத்துக்கு அருகே கூவம் ஆற்றை ஒட்டி, ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதாவது, சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில் பாதையை அமைக்கும் பணியை ரயில்வே மேற்கொண்டுளள்து. இதற்காக, பறக்கும் ரயில் சேவையில், சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையேயான ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டு, முழு வேகத்தில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான், இரவு நேரத்தில் வேலை நடப்பதாகவும், கட்டுமானக் கழிவுகள் கூவத்தில் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அருகில் உள்ள வளாகத்தில் கட்டடக் கழிவுகளைக்கொட்டுவதற்கு வசதி உள்ளது. ஆனால், எளிதாக கூவத்தில் அனைத்தும் தள்ளப்படுவதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெளிவாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால்,இது குறித்து தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகணேசன் அளித்த பதிலில், கட்டுமானப் பணிகள் நடக்கும்போது கட்டுமானக் கழிவுகள் தவறி கூவத்தில் விழுந்திருக்கலாம். பத்து மணிக்கு மேல் ஒப்பந்ததாரர்கள் வேலை செய்வதில்லை. சில நேரங்களில் வேலை நேரம் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். கழிவுகள் கூவத்தில் விழாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்தில் பணிகள் நடக்காது என்பதையும் உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com