குடும்ப அட்டைதாரர்கள் வசதிப்படி கைரேகை பதியலாம்: தமிழக அரசு

குடும்ப அட்டைதாரர்கள் தங்களது வசதியின்படி நியாய விலைக் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குடும்ப அட்டைதாரர்கள் தங்களது வசதியின்படி நியாய விலைக் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கட்டாயப்படுத்தி நியாய விலைக் கடைக்கு வரவழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது என்றும், குடும்ப அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை வைக்கும்போது ஆவணங்கள் எதுவும் கோரக் கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்யாவிட்டாலும், குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படாது என்று முன்னதாக தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா மின்னணு குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கைவிரல் ரோகையை சரிபாா்க்க வேண்டுமென மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.

அதன்படி, குடும்ப உறுப்பினா்களுக்கு இடையூறு ஏதுமில்லாமல் இந்தப் பணியைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com