வீடூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர்: அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் திறந்து வைத்தார்.                   

வீடூர் அணையிலிருந்து பாசனத்துக்கான தண்ணீரை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் திறந்து வைத்தார்.                
வீடூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர்: அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் திறந்து வைத்தார்.                   

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வீடூர்  அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூரில் தொண்டியாறு  மற்றும் வராக நதியின் குறுக்கே வீடூர் அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையின் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் | நீர் ஆதாரம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் வீடூர் மற்றும் வானூர் வட்டம் சிறுவை, பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரக்கேணி, ஐவேலி, நெமிலி, எறையூர் கொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம் மற்றும் புதுவை மாநிலம் சுத்துக்கேணி சந்தைப்புதுக்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்  பயன்பெறும் வகையில் 11.2.2024 முதல் 24.6.2024 வரை 135 நாள்களுக்கு விவசாயிகளின் தேவைக்கேற்ப வீடூர் அணை பிரதான கால் வாயில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்நிலையில் பாசனத்துக்காக  வீடூர் அணை  தலை மதகிலிருந்து தண்ணீரை தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமார், ஒன்றியக்குழுத் தலைவர். யோகேஸ்வரி மணிமாறன் மற்றும் நீர்வளத்துறை செயற் பொறியாளர் பா.ஷோபனா. உதவி செயற் பொறியாளர் மு.ரமேஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள். விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com