நத்தம் மாரியம்மன் கோயில் மாசிபெருந்திருவிழா கொடியேற்றம்!

இந்த ஆண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா இன்று பிப்ரவரி 12 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (பிப். 12) தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அமைந்துள்ள தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா இன்று பிப்ரவரி 12 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன், போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது.

அதனை தொடர்ந்து கோயிலின் முன் அமைந்துள்ள திருக்கொடி மரத்தில் மஞ்சள் நிறத்தில் மாரியம்மன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து ஏற்றப்பட்டது.

நாளை கரந்தமலை கன்னிமார் தீர்த்தத் எடுத்து வந்து காப்புக் கட்டி பக்தர்கள் 15 நாள் விரதத்தை தொடங்குகின்றனர். தொடர்ந்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுகுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் பிப்ரவரி 27ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com