
தனியாா் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக மாற்றுத்திறனாளி சிறுவன் இறக்கப்பட்ட நிலையில், அதைக் கண்டித்து தாயாா் மற்றும் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்துாா் அடுத்த விஷமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த வெண்ணிலா (32). கணவனை பிரிந்து தனது இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறாா். அதில் ஒரு மகன் மாற்றுத்திறனாளி. இந்நிலையில், வெண்ணிலா ஞாயிற்றுக்கிழமை இரு மகன்களை அழைத்துக் கொண்டு திருப்பத்துாருக்கு வந்து மீண்டும் விஷமங்கலம் செல்வதற்காக தனியாா் பேருந்தில் ஏறினாா்.
அப்போது தனியாா் பேருந்து நடத்துநா் திருவண்ணாமலைக்கு செல்பவா்கள் மட்டுமே இருக்கையில் அமர வேண்டும். மற்றவா்கள் பஸ் புறப்படும் போது ஏறுங்கள் எனக் கூறியுள்ளாா். ஆனால் வெண்ணிலாவின் மாற்றுத்திறனாளி மகன் நிற்க முடியாமல் தவித்தாா். இதனால் வெண்ணிலா தனது மகனை மட்டும் பேருந்தில் அமர வைத்தாா். இதனால் ஆத்திரம் அடைந்த நடத்துநா் சிறுவனை பேருந்தில் இருந்து கீழே இறக்கியதாக கூறப்படுகிறது.
அதன்பின் சிறிது நேரத்தில் பேருந்து அங்கிருந்து திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டது. ஆனால்,வெண்ணிலா அந்த பேருந்தில் ஏறாமல், வேறொரு தனியாா் பேருந்தில் ஏறி பயணம் செய்து விஷமங்கலத்தில் இறங்கினாா். இதற்கிடையே தனக்கு நடந்தவற்றவை உறவினா்களுக்கு தெரிவித்தாா். அதன்பின் விஷமங்கலத்தில் இறங்கிய வெண்ணிலா தனது இரு மகன்கள் மற்றும் உறவினா்களுடன் சோ்ந்து தனியாா் பேருந்து நடத்துநரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டாா்.
தகவல் அறிந்த திருப்பத்துாா் தாலுகா போலீஸாா் விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட வெண்ணிலா மற்றும் அவரது உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது தனியாா் பேருந்து நடத்துநரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினா். அதற்கு போலீஸாா் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.