4 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்: திருமாவளவன்

திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினரிடம் 4 தொகுதிகளைக் கேட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுக சார்பில் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைப் பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"தனித்தொகுதி 3, பொதுத் தொகுதி 1 என 4 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை திமுக குழுவினரிடம் வழங்கினோம்.

அதிமுக, பாஜக கூட்டணி சிதறிக் கிடக்கிறது. பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி இயங்குகிறது. தனிச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com