ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை
சென்னை : ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அமைச்சர்கள் இன்று (பிப்.13) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பு, இம்மாதம் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உடன் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி ஆகியோர் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.