"வெள்ளை நிற பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை"

வெள்ளை நிற பஞ்சுமிட்டாய்க்கு அனுமதி; விஷ வேதிப் பொருள் சேர்க்கப்பட்டவைக்கு மட்டும் தடை
"வெள்ளை நிற பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை"

வெள்ளை நிற பஞ்சுமிட்டாய் விற்க தடையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சு வேதிப் பொருள்களைக் கொண்டு பஞ்சு மிட்டாய் தயாரிக்கப்படுவதால் இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடைவிதித்து அந்த மாநில துணைநிலை ஆளுநா் அண்மையில் உத்தரவு பிறப்பித்தாா். இதேபோன்று தமிழகத்திலும் பஞ்சு மிட்டாய்க்குத் தடை வருமா என்ற கேள்வி இருந்தது.

இதனிடையே, சென்னையில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் மெரீனா கடற்கரையில் கடந்த 8-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது செயற்கை நிறமூட்டிகள் சோ்க்கப்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்கெட்டுகளில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருந்த பஞ்சு மிட்டாய்களின் மாதிரிகள் தரக் கட்டுப்பாட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன.

அதில், பஞ்சு மிட்டாய்க்கு அடா் இளஞ்சிவப்பு நிறத்தை ஏற்படுத்த நச்சு வேதிப் பொருளான ‘ரோடமைன்-பி’ என்ற செயற்கை நிறமூட்டி பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடா்பான அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்க தடையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அவர் அளித்த பேட்டியில், வண்ணம் கலக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்க்குத்தான் தடை, வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் விற்க தடையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com