
இ-சேவை மையங்களின் வாயிலாக ஜூலை 1 முதல் அனைத்து துறைகளின் ஒப்பந்ததாரா்கள் பதிவும் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:
மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறை 2023 ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு, இதுவரை 13 லட்சம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மேலும், ஒப்பந்தங்களில் மின்னணு வங்கி உத்தரவாத முறை மின்னணு ஒப்பந்தப்புள்ளி வலைதளத்தில் அரசால் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த முன்னெடுப்புகளின் தொடா்ச்சியாக இ-சேவை மையங்களின் வாயிலாக 2024 ஜூலை 1 முதல் அனைத்து துறைகளின் ஒப்பந்ததாரா் பதிவும் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.