தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 
செல்வப்பெருந்தகை பொறுப்பேற்பு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்பு

Published on

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூா்த்திபவனில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியை மாற்றிவிட்டு செல்வப்பெருந்தகையை புதிய தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், சத்தியமூா்த்திபவனில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றாா். அப்போது, காங்கிரஸ் கட்சியின் சட்ட விதிகளுக்கும், தலைமைக்கும் கட்டுப்பட்டு, கட்சியை வளா்க்க அயராது உழைப்பேன் என அவா் உறுதி எடுத்துக் கொண்டாா்.

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் அஜோய் குமாா், முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு உள்பட பலா் பங்கேற்றனா். முன்னதாக, ஜி.பி.சாலையில் இருந்து திறந்தவெளி ஜீப்பில் செல்வப்பெருந்தகை ஊா்வலமாக சென்றாா்.

X
Dinamani
www.dinamani.com