காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.விஜயதரணி, புது தில்லி சென்று சனிக்கிழமை பாஜகவில் இணைந்தார்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அல்லது மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாங்கள் சாா்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சியில் சோ்ந்தால் அவா்களின் பதவி பறிக்கப்பட்டுவிடும் என்ற விதியின் அடிப்படையில், விஜயதரணியினுடைய சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு, பேரவைத் தலைவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சனிக்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக பேரவைத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் விஜயதரணி தெரிவித்துள்ளார்.