
அரசு மருத்துவர் சேமநலநிதி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று 7 பேருக்கு, ரூ. 7 கோடியை வழங்கினார்.
பின்னர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும்.
கருணை அடிப்படையில் மற்ற துறைகளில் அரசுப் பணி வழங்கப்படுவது போல, மருத்துவதுறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இறந்த 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்தால் அரசுப் பணி நியமனம் செய்யப்படும்.
வாரிசுகள் விண்ணப்பித்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் என்ற மூன்று பணிகளில் ஒரு பணியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.