
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ,. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இவரது கணவர் பன்னீர்செல்வம் 2011-2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தபோது ஒப்பந்தம் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.