கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு நிதியுதவி!

அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை "ஆ" கிராமம், பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த பிப் 25 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள்

சஜிதா (வயது 13) த/பெ.முத்துக்குமார் மற்றும் தர்ஷினி (வயது 13) த/பெ.இரத்தினகுமார் ஆகிய இருவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல்

நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின்

பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com