தமிழில் பேச முடியவில்லையே என ஏக்கமாக உள்ளது: பிரதமர் மோடி

தமிழில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் தனக்கு அதிகம் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தமிழில் பேச முடியவில்லையே என ஏக்கமாக உள்ளது: பிரதமர் மோடி

நெல்லை பாளையங்கோட்டையில் நடைற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

"மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திமுகவும், காங்கிரஸும் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள். திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புகையில் இருந்தும் சமைக்கும் துன்பத்திலிருந்தும் பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.

நமது தாய்மார்கள் சகோதரிகள் வாழ்க்கையில் மிகப் பெரிய நன்மை கிடைத்துள்ளது. அதனால்தான் நான் செல்கிற பக்கம் எல்லாம் இத்தனை தாய்மார்கள், பெண்கள் திரளாக வந்து எனக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.

தமிழில் பேச முடியவில்லையே என ஏக்கமாக உள்ளது: பிரதமர் மோடி
அல்வாவைப் போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள்: பிரதமர்

தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகமாக இருக்கிறது. அவ்வபோது ஒரு சில வார்த்தைகள் பேசுகிறேன். ஆனாலும் முழுமையாக தமிழ் பேச முடியவில்லை. என் பேச்சு உங்களுக்கு புரியும் படி பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது.

ஆனாலும் இத்தனை ஆயிரம் பேர் என் முன் இருக்கிறீர்கள் எனது ஒவ்வொரு சொல்லும் புரியாவிட்டாலும் எனது மனதை புரிந்து கொண்டு நீங்கள் எதிரில் இருக்கிறீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது இரண்டு கையையும் எடுத்து கும்பிடுகிறேன், தலை வணங்குகிறேன். நீங்கள் என்னை வாழ்த்துங்கள்" எனப் பேசினார்

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல் முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டு பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் பாஜகவில் இணைந்த விஜயதரணி கூட்டணி கட்சித் தலைவர் ஜான்பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com