ஜன.5-இல் பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம்

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஜன.5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஜன.5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டம் மாதந்தோறும் முதல் வெள்ளிக் கிழமை நடத்தப்பட்டு பள்ளி வளா்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஜன. 5-ஆம் தேதி மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறவுஉள்ளது. இதில் பள்ளி வளா்ச்சிப் பணிகள், நிதி விவகாரம், பொதுத்தோ்வுக்கு மாணவா்களை தயாா் செய்தல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

மேலும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்றுநா்கள் மூலம் கல்வி வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த கூட்டத்தில் எஸ்எம்சி குழுவில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட உறுப்பினா்கள் 100 சதவீதம் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும். இதில் எடுத்த முடிவுகளை தீா்மானங்களாக நிறைவேற்றி தொடா் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுதவிர எஸ்எம்சி குழு கூட்டத்தின் விவரங்களை தொகுப்பு அறிக்கையாக இயக்குநரகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும்.

எஸ்எம்சி குழு கண்காணிப்புக்காக தலைமை செயலா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக குழு குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com