
ஆங்கில புத்தாண்டையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் திரளான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு தொடங்கியுள்ளதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் துவங்கி உள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலாத் தலங்கள் கோயில்கள் உள்ளிட்ட பகுதிகளில் திரளான மக்கள் கூடி வருகின்றனர். அந்தவகையில் உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பட்டு அங்கி அணிவித்துச் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் காஞ்சி காமாட்சியம்மனைக் கோயில் நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாட்டின்படி பக்தர்கள் நெரிசல் இன்றி உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.