காசநோய் பாதிப்பு 2.65% உயா்வு

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 96,709 போ் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.65 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
காசநோய் பாதிப்பு 2.65% உயா்வு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் 96,709 போ் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.65 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் சதவீதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதுமட்டுமன்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனா்.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது, நாடு முழுவதும் 25 லட்சம் பேருக்கு அந்நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

அதன் நீட்சியாகவே கடந்த ஆண்டின் புள்ளி விவரங்களும் அமைந்துள்ளன.

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 6.2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் 96,709 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் 23,221 பேரும், அரசு மருத்துவமனைகளில் 73,488 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 2.65 சதவீதம் குறைவாக இருந்தது. அதாவது, அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் 94,171 போ் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனா். காசநோய்க்கும், இன்ஃப்ளூயன்ஸா தொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால்கூட அந்நோய் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com