ஜன. 19 முதல்.. தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்!

கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. 
கோப்புப் படம்
கோப்புப் படம்


நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஜன. 19 முதல் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. 

இது தொடர்பாக தமிழக விளையாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. 

கரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. 2021ம் ஆண்டிற்கு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியாணா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022ம் ஆண்டிற்கு மத்தியப் பிரதேச மாநிலம்
போபாலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

நடத்தப்படும் விளையாட்டுப் பிரிவு பட்டியல் 

விதிமுறைகள்:

பங்கு பெறும் வீரர் / வீராங்கணைகள் 01.01.2005 அன்றோ அல்லது அதற்குப்
பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.

பங்கு பெறும் வீரர் / வீராங்கணைகள் கீழ்க்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் இரண்டு
சான்றிதழ்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

  • ஆதார் அடையாள அட்டை (அல்லது) பாஸ்போர்ட்
  • பிறப்பு சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 01.01.2023 அன்றோ அல்லது அதற்கு முன் நகராட்சி/கிராம பஞ்சாயத்துக்கள் மூலம் வழங்கப்பட்டது)
  • பள்ளி சான்றிதழ்கள்
  • இருப்பிடச் சான்றிதழ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com