முதலீடுகள் முதலில் வருவது தமிழ்நாட்டுக்குத்தான்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

முதலீடுகள் முதலில் வருவது தமிழ்நாட்டுக்குத்தான்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

நாட்டிற்குள் வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் தட்டுவது தமிழ்நாட்டின் கதவைத்தான் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.


சென்னை: நாட்டிற்குள் வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் தட்டுவது தமிழ்நாட்டின் கதவைத்தான் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, நாட்டிற்குள் வரும் எந்த வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் முதலீடு செய்ய முதலில் வருவது தமிழ்நாட்டுக்குத்தான். 

இதில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறிப்பாக பரவலாக்கப்பட்ட வளர்ச்சிக்கு எதெல்லாம் தேவையோ அவற்றை மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம். 

தமிழ்நாட்டின் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் அனைத்து நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மேலும், நீடித்த ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியதாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு இருக்கும்.

தஞ்சாவூரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படுதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com