முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு: மின் உற்பத்தி குறைந்தது!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் குறைத்து வெளியேற்றப்பட்டதால், லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றும் தலைமதகு.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றும் தலைமதகு.

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் குறைத்து வெளியேற்றப்பட்டதால், லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை தமிழக பகுதிக்கு விநாடிக்கு 1,867 கன அடியாக திறந்து விடப்பட்டது, வெள்ளிக்கிழமை விநாடிக்கு 511 கன அடியாக திறக்கப்பட்டது. அதனால் வியாழக்கிழமை லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 168 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம், வெள்ளிக்கிழமை உற்பத்தி குறைந்து 45  மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்பட்டது. 

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாக அணை பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

அணை நிலவரம்

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.80 அடியாகவும், (மொத்த உயரம் 152 அடி) அணைக்குள் நீர் இருப்பு 6,319 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 716.39 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றும் விநாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது.

நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 15.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 17.2 மி.மீ., மழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com