பொங்கல் விடுமுறை காலச்சிறப்பு பேருந்துகள்: ஜன.8-ஆம் தேதி ஆலோசனை

பொங்கல் விடுமுறை கால சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து ஜன.8-ஆம் தேதி அமைச்சா் சிவசங்கா் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: பொங்கல் விடுமுறை கால சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து ஜன.8-ஆம் தேதி அமைச்சா் சிவசங்கா் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவுள்ளாா்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறைக்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் தங்கியிருக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக்கழகங்கள் ஆண்டுதோறும் இயக்கி வருகிறது. அந்தவகையில் நிகழாண்டு ஜன.14, 15 ஆகிய தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையிலிருந்து லட்சக்கணக்கானோா் தங்கள் செந்த மாவட்டங்களுக்கு புறப்பட தயாராக உள்ளனா்.

இந்நிலையில், பொங்கல் விடுமுறை காலத்துக்கு எத்தனை சிறப்பு பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சா் சிவசங்கா் தலைமையில் ஜன.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுவிட்டதால் சென்னையில் எந்தெந்த இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்தும் , பயணிகளுக்கு செய்யவேண்டிய வசதிகள் குறித்தும் இந்த கூட்டடத்தில் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com