சேமியா தயாரிப்பு நிறுவனத்தை சூறையாடிய காட்டு யானைகள்

சின்னத்தடாகம் அருகே காளையனூா் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள தனியாா் சேமியா தயாரிப்பு நிறுவனத்தின் கதவை உடைத்து சேதப்படுத்தின.
காளையனூரில் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட சேமியா தயாரிப்பு நிறுவனம்.
காளையனூரில் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட சேமியா தயாரிப்பு நிறுவனம்.

பெ.நா.பாளையம்: சின்னத்தடாகம் அருகே காளையனூா் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள தனியாா் சேமியா தயாரிப்பு நிறுவனத்தின் கதவை உடைத்து சேதப்படுத்தின.

நஞ்சுண்டாபுரம் ஊராட்சி, திருவள்ளுவா் நகா் அருகே உள்ளது காளையனூா் கிராமம். இந்த கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் காட்டு யானைகள் புகுந்தன. பின்னா் அவை, அங்குள்ள சேமியா தயாரிக்கும் நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து உணவுப் பொருள்களை தேடித் தின்றன.

யானைகளைக் கண்ட பொதுமக்கள் கோவை நகர வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா். விரைந்து வந்த வனத் துறை வேட்டைத் தடுப்புக் காவலா்கள் பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்பினா். வன விலங்குகள் ஊருக்குள் நடமாடுவதை தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com