உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய மத்திய அமைச்சர்

உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.
உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய மத்திய அமைச்சர்

உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கிவைத்தார். இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்காக ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்க்க அரசு திட்டமிட்டுள்ளது. மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,  கலாசாரம், வரலாற்றில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நீங்கள் வந்திருக்கிறீர்கள். 

ஒவ்வொரு மாநிலமும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். மாநிலங்கள் முன்னேறாமல் நாடு முன்னேறாது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கு வைத்து செயல்படும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். தமிழநாட்டிற்கு பிரதமர் மோடியின் இதயத்தில் தனி இடம் உள்ளது. தமிழக கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியுள்ளார் மோடி. காலனி ஆதிக்க மனநிலை மாற வேண்டும். பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

2047ல் வளர்ந்த நாடாக இந்தியா மாற பிரதமர் 5 திட்டங்களை முன்வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த கடும் சவால்களை எதிர்கொண்டோம். இளைஞர்கள் உள்பட அனைவரும் தொழில் தொடங்குவதற்காக விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com