முதலீடும் மழையாக பொழியும் என நம்புகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

உலக முதலீடுகளும் மழையாக பொழியும் என்று நம்பிக்கை வந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலீடும் மழையாக பொழியும் என நம்புகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

உலக முதலீடுகளும் மழையாக பொழியும் என்று நம்பிக்கை வந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கிவைத்தார். இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் காலையில் மழை பெய்தது. அதேபோன்று முதலீடும் மழையாக பெய்யும் என நம்புகிறேன்.

மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்கிறேன். வெளிநாடு சென்றால் கோட் சூட் அணிவது வழக்கம். வெளிநாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் வந்துள்ளதால் தற்போது கோட் சூட் அணிந்துள்ளேன். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் உள்ளது.

திருவள்ளுவர், கனியன் பூங்குன்றனார் பிறந்த மண்ணிற்கு முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். பொருளாதார வளர்ச்சியில் அதி விரைவு பாதையில் தமிழ்நாடு பயணித்து வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சி மேலும் உயரும் என நம்புகிறேன். மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறனை உலகிற்கு வெளிப்படுத்த முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, தலைமைத்துவம், நீடித்த வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து மாநாடு நடக்கிறது. இந்தியாவின் பொருளாதார கொள்கையில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. ஆட்சி மீது நல்லெண்ணம், சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் மட்டுமே முதலீடு குவிகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com