மாநாட்டில் ரூ.6,64,180 கோடி முதலீடு ஈர்ப்பு: மு.க. ஸ்டாலின்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6, 64,180 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 8) தெரிவித்துள்ளது. 
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6, 64,180 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 8) தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் 2 நாள்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பல தொழிற்சாலைகளை திறந்துவைத்து, பல தொழிற்சாலைகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

அதனைத் தொடர்ந்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

உலக அரங்கில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகும். 
உலகமே வியக்கும் வண்ணம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி பலதரப்பினரின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா. தொழில்துறை அமைச்சர்
பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலயச் சாதனையைச் செய்திருக்கும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவை பாராட்டுகிறேன்.

முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக இருக்கும். தமிழகத்தின் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகளை திறந்துவைத்துள்ளேன். 40 ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இது மூலமாக 74 ஆயிரத்து 757
மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டில் ரூ.6, 64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடுகள் கிடைத்துள்ளன.

இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

புத்தாக்க தொழில் (ஸ்டார்ட் அப்) துறையில் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதி துறையில் தமிழகத்தின் போட்டியிடும் திறன் மேலும் அதிகரிக்கும்.

மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன்,தொழில் துறை அமைச்சர்  டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில் துறை செயலாளர் அருண் ராய், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com