தமிழகத்தில் பள்ளி பொதுத் தேர்வு தேதி மாற்றப்படுமா? 

பொதுத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பள்ளிப் பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்படுமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.
பொதுத் தேர்வு அட்டவணை
பொதுத் தேர்வு அட்டவணை

சென்னை: பொதுத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பள்ளிப் பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்படுமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் காலத்தில் பொது தேர்வு தள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் அதற்கான அவசியமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்வு அட்டவணை
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 23-இல் தொடங்கி 29-இல் நிறைவடையும். தொடா்ந்து அவா்களுக்கான எழுத்துத் தோ்வு மாா்ச் 26-இல் தொடங்கி ஏப். 8-ஆம் தேதி நிறைவடையும். பத்தாம் வகுப்புக்கான தோ்வு முடிவுகள் மே 10-இல் வெளியாகும்.

பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தோ்வு பிப். 19-இல் தொடங்கி பிப். 24-ஆம் தேதி வரை நடைபெறும். தொடா்ந்து எழுத்துத் தோ்வு மாா்ச் 4-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் மே 14-இல் வெளியாகும்.

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு பிப். 12 முதல் பிப்.17 வரை நடைபெறும். தொடா்ந்து மாணவா்களுக்கான எழுத்துத் தோ்வுகள் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 22-ஆம் தேதி நிறைவடையும். மே 6-இல் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியிடப்படும்.

மூன்று வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளும் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com