
சென்னை: பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்துவது மக்களுக்கு விரோதமானது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்க ஓட்டுநர்களை வைத்து முழு அளவிலான பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 6 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் வழக்கமாக இயக்கப்படும் 9,452 பேருந்துகளில் 8,787 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசியது:
“பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்துவது பொது மக்களுக்கு விரோதமானது, எனவே போராட்டத்தை கைவிட வேண்டும். அதிமுக ஆட்சியில் வழங்காத கோரிக்கைகளை இப்போது அதே அதிமுகவுடன் இணைந்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.” எனத் தெரிவித்தார்.
மேலும், இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் மீண்டும் அதே கோரிக்கையை தொழிற்சங்கங்கள் முன் வைப்பது ஏன் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.